முகப்பு உலகம் வடமேற்கு அவுஸ்ரேலிய கடலோரத்தை வெப்ப அலைகள் தாக்கி வருகின்றன!
உலகம்ஏனையவைகட்டுரைகள்பொருளாதாரம்

வடமேற்கு அவுஸ்ரேலிய கடலோரத்தை வெப்ப அலைகள் தாக்கி வருகின்றன!

பகிரவும்
பகிரவும்

வடமேற்கு ஆஸ்திரேலிய கடல் வெப்ப அலையில் இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன – இவ் அலைகளின் வீச்சு தெற்கே நகர்கிறது

கனூரியா கடற்கரை (Gnoorea Beach), கராதா (Karratha) அருகே இதுவரை 30,000க்கும் அதிகமான இறந்த மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.

வடமேற்கு ஆஸ்திரேலிய கடலில் நீண்ட காலமாக தொடரும் கடல் வெப்ப அலை (Marine Heat Wave) தீவிரமடைய தொடரும் நிலையில், இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன.

கராதா அருகே கனூரியா கடற்கரையில் நிகழ்ந்த இந்த பெரிய அளவிலான மீன்களின் இறப்பு கடல்சார் அறிவியல் குழுவை கவலைக்கிடமாக்கி உள்ளது. ஏனெனில் இந்த வெப்ப அலை தெற்கே, நிங்களூ ரீஃப் (Ningaloo Reef) மற்றும் ஷார்க் பே (Shark Bay) இல் உள்ள கடற் புல் தோட்டங்களை (Seagrass Gardens) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பும் இவ்வாறான நிகழ்வுகளை பார்த்துள்ளதால், இதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பற்றிய கவலை உள்ளது.

2010-11 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் வெப்ப அலை WA கரையின் மீன் பிடிப்பு துறை மற்றும் உயிரியல் சூழல்களை கணிசமாக சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கடல் வெப்ப அலை கடந்த செப்டம்பரில் ஆரம்பமானது, ப்ரூம் (Broome) அருகே கடல் வெப்பநிலை சாதாரணத்தை விட 3°C அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் குறைவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இது, உலகளவில் கடல்களில் அதிகூடிய வெப்ப நிலைகளுடன் நெருங்கி வருகிறது, இதற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக இருக்கிறது.

 

 

 

 

மீன்களின் இறப்பு ஒரு கண்கூடாக காணக்கூடிய பேரழிவின் குறியீடாகும், ஆனால் இது பெரும்பாலும் கவனத்திற்கு வராமல் மறைந்தே இருக்கும். ஆனால், கடல் வெப்ப அலைகள் இதைவிட பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன – கடற் புல் (Seagrass) புல்வெளிகளை மற்றும் கெல்ப் (Kelp) காட்டுகளை அழிப்பதிலிருந்து மீன் பிடிப்பு துறையை முற்றிலும் சேதப்படுத்துவதாகவே அமைகின்றது.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தங்க வர்த்தகத்தில் அதிரடி காட்டிய ஜான் மஹாமா

கானா தனது உள்ளூர் தங்க சந்தையில் வெளிநாட்டவர்களுக்கு வணிகம் செய்யத் தடை விதித்துள்ளது. இது நாட்டின்...

மின்காந்த பிணைய நிலைத்தன்மைக்காக சூரிய சக்தி யூனிட்களை தற்காலிகமாக நிறுத்துமாறு மின்சார சபை மீண்டும் வேண்டுகோள்

மின்சார சபையின் இந்த வேண்டுகோள் இன்று விடுக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில், மீதமுள்ள இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களின்...

புதுவருடத்தை முன்னிட்டு மூன்று நாள்களில் ரூ.134 மில்லியன் வருவாய்!

புதுவருட காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் (ஏப்ரல் 11, 12 மற்றும் 13) நாடளாவிய...

CEB-இன் அறிவிப்பு: சூரிய மின்சார உரிமையாளர்களுக்குப் புது வேண்டுகோள்!

இலங்கை மின்சார சபை (CEB) இன்று முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சூரிய மின்சார...