- அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கல் செய்யும் ஆரம்ப நடவடிக்கையாக, இலங்கை அரசு ‘GovPay’ எனும் மின்னணு பணப்பரிவர்த்தனை வசதியை பெப்ரவரி 07ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கமைய, அறிமுக நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தளம் அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகளை எளிதாகவும் நவீனமாகவும் மாற்றி, ஒரு திறம்பட செயல்படும் மின்னணு அமைப்பினூடாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட