தவீ சமரவீர, மவுன்ட் லவினியாவில் உள்ள சென் தோமஸ் கல்லூரியின் மாணவன், 11 வயதிற்குட்பட்ட பிரிவின் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 6வது இடத்தை அடைந்துள்ளார்.
இந்த சாதனை, எந்தவொரு வயது பிரிவிலும் இலங்கையின் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெறப்பட்ட மிக உயர்ந்த தரவரிசையாகும்.
மேலும், அவர் 13 வயதிற்குட்பட்ட பிரிவின் தரவரிசையில் 33வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
இதன் மூலம், தவீ சமரவீர இரண்டு வயது பிரிவுகளிலும் உலகின் முதல் 100 வீரர்களில் இடம்பெறுவதற்கும் முடிந்துள்ளது.
கருத்தை பதிவிட