முகப்பு இலங்கை கனடாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆவா குழு தலைவர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

கனடாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆவா குழு தலைவர்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். கனடாவில் கைது செய்யப்பட்ட ஆவா கும்பலின் முன்னாள் தலைவன் பிரசன்ன நல்லலிங்கம் (32 வயது), பிரான்சில் 2022 செப்டம்பரில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் அரசால் தேடப்பட்டு, தற்போது பிரான்ஸ் அரசுக்கு ஒப்படைக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்.அவரை பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணை 2025 மே மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...