முகப்பு இலங்கை இலங்கையில் இப்போது இருப்பது வரலாறா?
இலங்கைகட்டுரைகள்கல்விசமூகம்செய்திசெய்திகள்

இலங்கையில் இப்போது இருப்பது வரலாறா?

பகிரவும்
பகிரவும்

வரலாறு என்ற துறை மிக முக்கியமான துறையாகும். அது எந்தவித பாகுபாடும் அற்றதாக இருக்க வேண்டும். உள்ளதை உள்ளபடியாக சொல்வது தான் உண்மையான வரலாறு. துர்அதிர்ஸ்டவசமாக எமது இலங்கையிலும் சரி இன்னும் சில நாடுகளிலும் சரி அது உண்மையானதாக இருப்பதில்லை. எமது நாட்டையோ மதத்தையோ இனத்தையோ பெருமைப்படுத்துவதற்காக, அல்லது மேன்மைப்படுத்துவதற்காக மிகைப்படக் கூறுதல், இருட்டடிப்புச் செய்தல் தெளிவுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளினால் சரியான உண்மையை கூறுவதில்லை.
வரலாறு என்ற துறை மிக முக்கியமான துறையாகும். ஏனெனில் வரலாறு திரும்பத் திரும்ப நிகழும் என்பார்கள். அதாவது இவ்வாறு இங்கு நடந்தது அதனால் இவ்வாறான நிகழ்வு அங்கே நடந்தது என்பது ஒரு விதியாகும். உதாரணமாக ஒரு உள்நாட்டிலே உள் முரண்பாடுகள் நிகழ்ந்த போது அந்நிய தலையீடுகள் ஏற்படும் என்பது விதியாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றை நாம் எடுத்துப் பார்ப்போமாக இருந்தால் இலங்கையில் எப்போது எப்போதெல்லாம். உள் முரண்பாடுகள் நிகழ்ந்தனவோ அப்போதெல்லாம் அந்நிய தலையீடுகள் அல்ல படையெடுப்புகளே நிகழ்ந்துள்ளன. என்பதை நாம் பல தடவைகள் கண்டுள்ளோம். அண்மைக்கால வரலாற்றிலும் கூட அதை நாம் அவதானிக்கலாம்.
எனவே வரலாற்று துறையைக் கற்றவர்களினால் பல தீர்க்கதரிசனங்களை யூகிக்கவும் வெளிப்படுத்தவும் முடியும். அதனால் வரலாற்றுத் துறை நாட்டின் எதிர்காலத்தை அமைப்பவர்களுக்கு, அமைக்க திட்டமிடுகின்றவர்களுக்கு அவசியமான ஒரு துறையாகும்.

வரலாற்றை நன்கு கற்காதவர்கள் ஆட்சி பீடத்தில் இருக்கும் போது அந்த நாடு ஒரு நிலையான அபிவிருத்தியை அடைய முடியாது. திடீர் வளர்ச்சிகள் ஏற்படலாம் ஆனால் அதைவிட பலமான வீழ்ச்சிகளும் ஏற்பட முடியும். எனவே வரலாறு ஒரு முக்கியமான வழிகாட்டியாக அமையும்.
ஆனால் அவ்வாறான வரலாற்றை இன மத தேசிய உணர்வுகளுக்கு பலியாகி பிரிவுபடுத்தவோ இருட்டிக்கவோ மிகைப்படுத்தவோ முற்பட்டால் அதன் மூலம் நாம் சிறந்த வழிகாட்டலை காண முடியாது எனவே வரலாறு எழுதப்படும் போது இன மத சமுதாய பிரதேச தேசிய உணர்வுகளுக்குள் விழுந்துவிடாமல் எழுதப்படல் வேண்டும்.

இலங்கையின் வரலாற்றுக்கு பெரும்பாலானவர்கள் தீபவம்சம் மகாவம்சம் என்பவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளும் போக்கு கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். மகாவம்சம் ஒரு சமய காவியம் ஆகும். அதை எழுதிய மகாநாமதேரரே “மகா வம்சத்தை நான் எழுதியது பௌத்த மக்கள் அதைப் படித்து இன்புறுவதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அத்தகைய மத சார்பு இலக்கிய நூலை வரலாற்றுக்கு ஆதாரமாகக் கொண்டால் அந்த வரலாறு எமது கல்வியாளர்களுக்கு ஒரு சிறந்த விளைவை நல்க முடியாது.

இலங்கையின் பல வரலாற்று நூல்கள் இவ்வகையான பாதிப்புகளை கொண்டிருப்பது உண்மை. அது மாத்திரம் அல்லாமல் பாடசாலை வரலாற்று பாடநூல்களை தயாரித்தவர்களும் அவ்வாறான பாதிப்புகளுடன் வரலாற்றை எழுதியுள்ளதை நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும்.


இலங்கை வரலாற்றை கற்க வேண்டுமானால் கணிதத்திலேயே சிறந்த தேர்ச்சி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறுவார்கள். ஏனெனில் கழிக்க வேண்டியதை கழித்து பிரிக்க வேண்டியதை பிரித்து கூட்ட வேண்டியதை கூட்டி பெருக்க வேண்டியதை பெருக்கியே உண்மையான பலவற்றை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு வள்ளுவரும் சிறப்பான ஒரு வழிகாட்டலை எமக்கு தந்திருக்கின்றார். அது “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதே ஆகும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?

நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி...

ரஷ்யா ஆற்றல் ஒப்பந்த மீறல்களை அமெரிக்கா மெதுவாக உணருகின்றது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது இரவு உரையில், ரஷ்யா ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதை...

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,700-ஐ தாண்டியது!

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...