முகப்பு உலகம் “மஸ்க் மற்றும் முதலீட்டாளர்கள் OpenAI-யை மீண்டும் இலாப நோக்கற்ற நிறுவனமாக மாற்ற முயற்சி!
உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

“மஸ்க் மற்றும் முதலீட்டாளர்கள் OpenAI-யை மீண்டும் இலாப நோக்கற்ற நிறுவனமாக மாற்ற முயற்சி!

பகிரவும்
xr:d:DAFnGiFgYCQ:1027,j:5411485056421302134,t:23112312
பகிரவும்

மஸ்க் மற்றும் அவரது AI நிறுவனம் xAI மற்றும் பல முதலீட்டாளர்கள் இணைந்து, ChatGPT-யை உருவாக்கிய OpenAI-யின் கட்டுப்பாட்டை எடுத்து, அதை மீண்டும் அதன் ஆரம்ப நோக்கமான இலாப நோக்கற்ற (nonprofit) ஆராய்ச்சி நிறுவனமாக மாற்ற வேண்டும் என மஸ்கின் வழக்கறிஞர் மார்க் டோபெராஃப் தெரிவித்துள்ளார்.

இதற்கு OpenAI-யின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மன் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, மஸ்கின் சமூக ஊடக தளமான X-ல் பதிலளித்தார்: “வேண்டாம், ஆனால் நீங்கள் விரும்பினால், எங்களால் Twitter-ஐ $9.74 பில்லியனுக்கு வாங்க முடியும்” என அவர் எழுதியுள்ளார். மஸ்க் 2022-ம் ஆண்டு Twitter-ஐ (தற்போது X) $44 பில்லியனுக்கு வாங்கியிருந்தார்.

மஸ்க் மற்றும் ஆல்ட்மன் 2015-ம் ஆண்டு இணைந்து OpenAI-யை ஆரம்பித்தவர்கள். ஆனால் 2018-ல் மஸ்க் நிறுவனத்தின் இயக்கக குழுவில் இருந்து விலகியதிலிருந்து, OpenAI-யின் செயல்பாடுகளைப் பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன.

முன்னதாக OpenAI-யில் முதலீடு செய்த மஸ்க், கடந்த ஆண்டு நிறுவனம் தனது ஆரம்ப நோக்கிலிருந்து விலகி வருவதாக குற்றம் சாட்டி, முதலில் கலிபோர்னிய மாநில நீதிமன்றத்தில், பின்னர் அமெரிக்க தேசிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2015 முதல் 2018 வரையிலான காலத்தில் மஸ்க் OpenAI-யில் சுமார் $45 மில்லியன் முதலீடு செய்துள்ளார் என அவரது வழக்கறிஞர் டோபெராஃப் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கலிபோர்னிய நீதிமன்றத்தில் மஸ்க் மற்றும் OpenAI-யின் வழக்கறிஞர்கள் நேரடியாக மோதிக்கொண்டனர். மஸ்க், OpenAI தனது இலாப நோக்கற்ற நிலையை விட்டு வாணிப நிறுவனமாக மாறுவதை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி யவோன்னே கோன்சலஸ் ரொஜர்ஸ், “மஸ்க் மீது திரும்பமுடியாத பாதிப்பு ஏற்படும்” என்பதை நிரூபிப்பது கடினமானது எனக் கூறினார். இருப்பினும், OpenAI மற்றும் அதன் முக்கிய பங்குதாரரான மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றின் உறவைப் பற்றிய அவரது கவலைகளை அவர் வெளிப்படுத்தினார். இந்த வழக்கு 2026க்குள் விசாரணைக்கு வரலாம் என்றும், “மஸ்க் கூறுவது உண்மை என கருதலாம், ஆனால் அதை நீதிமன்றத்தில் ஆராய வேண்டும். அவர் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்” என நீதிபதி கூறினார்.

மஸ்க் மற்றும் xAI தவிர, Baron Capital Group, Valor Management, Atreides Management, Vy Fund, Emanuel Capital Management மற்றும் Eight Partners VC போன்ற முதலீட்டு நிறுவனங்கள் OpenAI-யை கைப்பற்றும் முயற்சியில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

OpenAI-யின் தற்போதைய நிர்வாகம் முழுமையாக ஒரு வாணிப நிறுவனம் ஆக மாற விரும்பினால், அதன் ஆரம்ப இலாப நோக்கற்ற திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட சொத்துகளுக்கு உரிய ஈடுசெய்தல் வழங்கப்பட வேண்டும் என மஸ்கின் வழக்கறிஞர் டோபெராஃப் வலியுறுத்தினார்.

மேலும், OpenAI-யின் தொழில்நுட்பத்தை பாதுகாக்கவும், மேலும் முன்னேற்றவும் சிறந்த நபர் மஸ்க்தான், ஏனெனில் அவர் OpenAI-யின் இணை நிறுவனர் மற்றும் திறமையான தொழில்நுட்பத் தலைவர் என அவர் மேலும் கூறினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?

நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி...

ரஷ்யா ஆற்றல் ஒப்பந்த மீறல்களை அமெரிக்கா மெதுவாக உணருகின்றது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது இரவு உரையில், ரஷ்யா ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதை...

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,700-ஐ தாண்டியது!

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...