இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் கைத்தொழிலாளர்களுக்கு (உற்பத்தியாளர்களுக்கு) உறுதிமனையில்லா கடன் (Collateral-Free Loan) வழங்கும் புதிய திட்டம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், பெறப்படும் கடனை திருப்பி செலுத்த தொடங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட காலகட்டம் (Grace Period) சலுகையாக வழங்கப்படும் என்பதும் கூறப்படுகிறது.
நிதி மற்றும் திட்டமிடல் இணை அமைச்சர் டாக்டர் ஹர்ஷண சூரியப்பெரும சமீபத்தில் பாராளுமன்றத்தின் ஒழுங்குமுறை மற்றும் விதிகள் தொடர்பான குழுக்கூட்டத்தில் இதை உறுதிப்படுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது:
“நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம், நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் கடன் சுமையை குறைக்கும் ஒரு வாய்ப்பு உருவாகும். இதனை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.”
இந்தக் குழுக்கூட்டம் தெற்காசிய விடுதலை வாணிப ஒப்பந்தம் (South Asian Free Trade Agreement) குறித்த விவாதத்திற்காக நடைபெற்றது.
அத்துடன், கைத்தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆதரவுகள், நிவாரண உதவிகள், மற்றும் வசதிகள் பற்றிய தெளிவான தகவல் வழங்கப்பட வேண்டும் என ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (Export Development Board) இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியது.
கருத்தை பதிவிட