யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய பெண் அதிகாரி தமிழினி சதீஷ் தவறுதலாக தீயில் எரிந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது கணவர் ஒரு கிராம சேவையாளராக இருப்பதுடன் இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றார். குறிப்பிட்ட பெண் அதிகாரி கற்பவதியாக இருக்கின்றார் என்பதும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுக்கை அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுதிரி மூலம் ஏற்பட்ட தீயினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்தை பதிவிட