கனடாவின் டொரொன்டோ நகரிலிருந்து அபூதாபி வழியாக இலங்கை வந்த 36 வயதான கனடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ. 360 மில்லியன் மதிப்பிலான ஹஷிஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சர்வதேச புலனாய்வு தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் பயணப்பைகளில் பல படுக்கை விரிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36.5 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
அதிகாரிகள், இந்த போதைப்பொருள்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படாமல், வேறு நாட்டிற்கு மீள ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்தை பதிவிட