2024.01.18 அன்று இரவு 10.15 மணியளவில், மித்தெனிய, கடேவத்த சந்தியில் ஏற்பட்ட ஒரு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின் மகள் மற்றும் மகன் உடனிருந்த நிலையில், மகள் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார், மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 39 வயதுடையவரும், அவரது மகள் 6 வயதுடையவளும் ஆவார். அவர்கள் கலுவாத்த பகுதியில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது..
கருத்தை பதிவிட