நாட்டில் உள்ள பாதாளக்குழுக்களை முற்றுமுழுதாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
10வது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சு ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரச அதிகாரப்பூர்வ அமைப்புகள் செயற்பட்டாலும், சில அதிகாரப்பூர்வ நிலையங்களுக்குள் கூட பாதாளக் குழுக்களின் தாக்கம் காணப்படுவதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்ற வளாக பாதுகாப்பு மேம்படுத்தப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார
இந்த சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார கலந்து கொண்டு நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும், நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கண்காணித்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்தை பதிவிட