2025.02.18 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய மிட்வெணிய மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2025.02.21 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவு, வெவபாக்கட, வீரகெட்டிய பொலிஸார் மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸ் குழுவின் ஒத்துழைப்புடன், இந்த சந்தேக நபரை மிட்வெணிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடைய இருவராகும். இவர்கள் வெவபாக்கட மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதோடு, தற்போது இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மிட்வெணிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட