முகப்பு இலங்கை யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – நண்பர் கடுமையாக காயம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – நண்பர் கடுமையாக காயம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், கந்தர்மட சந்திக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் யாழ் மாவட்ட செயலர் ம. பிரதீபனின் மகன் மற்றும் அவரது நண்பர் காயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம் வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதன் விளைவாக, அருகிலிருந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில், வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலரின் மகன் ஆதி சிறுபாடுகளுக்கு உள்ளாகினார். ஆனால், அவருடன் பயணித்த அவரது நண்பர் கடுமையான காயமடைந்ததுடன், அவரது கால்கள் வாகனத்திற்குள் சிக்குண்டதால், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடிய பின்னரே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனம் மாவட்ட செயலரின் வாகனம் என்பதோடு, அந்த நேரத்தில் அவர் இல்லாமல், அவரின் மகனே அதை செலுத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு -1

விபத்துக்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் சொந்த வாகனம் என்றும் உத்தியோகபூர்ப அரச வாகனம் இல்லை என்றும் உறுதிப்பதுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

அரசியல்வாதிகள் தான் போதை வியாபாரத்தை ஊக்குவித்தனர் – பிரதமரின் உறைச்சல்!

இலங்கையின் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இதுவரை முற்றிலும் முறியடிக்கப்படாததற்கான முக்கியக் காரணம், அந்தத் துறையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு...

திருமணமான தம்பதிகளுக்கான சிறந்த நாடு எது தெரியுமா?

உலகத்தில் திருமணமான தம்பதிகளுக்காக வாழ எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் சிறந்த நாட்டைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் தேடலுக்கு...

கடலூடாக கடத்தப்பட்ட போதைப்பொருள்: விசாரணையில் புது தகவல்கள்

கொழும்பு மேலதிக நீதிவான் மொஹமட் ரிஸ்வான் அவர்கள் 78 கிலோ ஹெரோயினும் 43 கிலோ “ஐஸ்”...

பிள்ளையனை சந்திக்க ரணிலின் முயற்சி தோல்வி – CID அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் மாநில அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். (பிள்ளையன்) என்பவரை சந்திக்க...