முகப்பு அரசியல் எதிர்க்கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் – ஆளும்கட்சியின் ஆதரவு!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

எதிர்க்கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் – ஆளும்கட்சியின் ஆதரவு!

பகிரவும்
பகிரவும்

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் காட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (பெப். 22) இடம்பெற்றதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கௌரவ சபாநாயகரினால் 2025.02.19 ஆம் திகதி சபையில் அறிவித்த தீர்மானம் தொடர்பில் நன்றி தெரிவித்து இந்த விடயம் சம்பந்தமான ஆளும்கட்சியின் நிலைப்பாட்டை கௌரவ சபை முதல்வர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்ததுடன், அந்தக் கடிதம் இதன்போது வாசிக்கப்பட்டது.

அதனையடுத்து, குழுக்களில் எதிர்க்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி முதற்கோலாசான் விடுத்த கோரிக்கை தொடர்பில் சாதகமாகக் கருத்திற்கொண்டு ஆளும்கட்சியின் தீர்மானத்தை விரைவாக வழங்குவதாக சபை முதல்வர் இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

தகவல்:- இலங்கை பாராளுமன்றம்

 

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...