முகப்பு இலங்கை இலங்கை பாராளுமன்றம்- 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

இலங்கை பாராளுமன்றம்- 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

பகிரவும்
பகிரவும்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று (பெப். 25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம்  திகதி முதல் இன்று (25) வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

இலங்கை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர (Kosala Nuwan...

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும்...

இலங்கை 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகர்களை சந்தித்த பிரதமர் மோடி!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, 1996 ஆம் ஆண்டு...