முன்னாள் பிரதமரின் செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய பிரதமரின் செலவுகள் ரூபா 630 மில்லியனிலிருந்து ரூபா 350 மில்லியனாக, அதாவது 44% குறைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
பிரதமருக்காக முன்னதாக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனம் அரசிற்கு திருப்பி அளிக்கப்பட்டதால், அதற்கான காப்புறுதி செலவு ரூ. 37.61 மில்லியனும், பராமரிப்பு செலவு ரூ. 16.15 மில்லியனும், மொத்தம் ரூ. 53.76 மில்லியன் மிச்சமாகியுள்ளது.
மேலும், பிரதமரின் தனிப்பட்ட பணியாளர்கள் 47ல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டதன் மூலம் மாத சம்பள மற்றும் கொடுப்பனவாக ரூ. 22 மில்லியன் செலவுகளை குறைக்க முடிந்துள்ளது. இதேபோல், பிரதமர் அலுவலகத்திற்கான எரிபொருள் செலவு ரூ. 3.24 மில்லியனிலிருந்து ரூ. 0.33 மில்லியனாக குறைக்கப்பட்டதால், மொத்தமாக லட்சம் 3.3 ரூபாய் மிச்சமாகியுள்ளது.
அதே நேரத்தில், பிரதமர் அலுவலகத்தில் இயங்கிய மருத்துவப் பிரிவு மூடப்பட்டதன் மூலம் மாதம் ரூ. 4 மில்லியன் செலவுகளை குறைக்க முடிந்துள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளாலும், மக்களின் வரிப்பணத்திலிருந்து முன்பு செலவாகிய தொகையின் பாதியை விட அதிகமான செலவுகளை குறைக்க முடிந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார். அவர் இந்த தகவலை 2025 நிதி திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் செலவுத் திட்டங்களை விளக்கும்போது தெரிவித்தார்.
கருத்தை பதிவிட