நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கிடையிலான விசேட சந்திப்பு கடந்த 25ஆம் திகதி அதிகாரசபையின் மைய காரியாலயத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உப்பை உயர்தரத்துடன் நியாயமான விலைக்கு சந்தையில் வழங்குவதற்கான தீர்வுகளை உருவாக்குவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
நுகர்வோர் அதிகாரசபை மேற்கொண்ட சந்தை மதிப்பீட்டின்படி, கடந்த காலத்தில் உப்பின் விலை மாறுபட்டதுடன், நிலவிய உப்பு பற்றாக்குறையும் தொழில்துறையில் ஏற்பட்ட சிக்கல்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
அரச மற்றும் முன்னணி உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், தற்போதைய சந்தை நிலைமையால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் உப்பு விலையை நிலைப்படுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், உள்ளூரில் உற்பத்தியாகும் உப்பு மார்ச் மாத இறுதியில் சந்தைக்கு வரவிருக்கின்றதால், அதற்குப் பின்னர் மிகவும் போட்டித்திறனான விலையில் உப்பு கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதுவரை, உப்பு விலையைக் குறைவாக வைத்திருக்க அதிகாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.
கருத்தை பதிவிட