எந்தவொரு இறக்குமதி செய்பவரும் இறக்குமதி செய்த மொத்த வாகன எண்ணிக்கையின் 25%க்கும் மேற்பட்டவை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால் இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இடைநிறுத்தப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய காப்பகத்தை பாதுகாப்பதற்கும், அதிகமான வாகனங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கும், தேவையற்ற மோட்டார் வாகனக் குவியலை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நபர்களுக்கு ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு இந்த புதிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அரசாங்கத்தின் நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் உபுல்மாலி பிரேமதிலக அவர்கள், கூட்டத்தின்போது இதுபற்றி தனது கருத்துகளை வெளியிட்டார்.
கருத்தை பதிவிட