20 வயது மாணவி சுதிக்ஷா கோனாங்கி, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். சமீபத்தில், நண்பர்களுடன் டொமினிகன் குடியரசுக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் புன்டா கானாவில் உள்ள ரியு ரெப்யூப்ளிகா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
சுதிக்ஷா, கடற்கரையில் பிகினி உடையில் நடந்து சென்றபோது, மர்மமான முறையில் காணாமல் போனார். தகவல் கிடைத்ததும், டொமினிகன் குடியரசின் அதிகாரிகள் விரைந்து தேடுதல் பணியை தொடங்கினர். கடல்பரப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் தீவிரமாக நடத்தப்படுகிறது.
போலீசார், சுதிக்ஷாவின் தோழிகளை விசாரணைக்கு உட்படுத்தி தகவல்களை சேகரித்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததன்படி, மார்ச் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, ரிசார்ட்டின் கடற்கரைக்கு சென்றனர். மற்ற நண்பர்கள் திரும்பிவிட்ட நிலையில், சுதிக்ஷா மட்டும் காணாமல் போனதாக கூறியுள்ளனர்.
இது குறித்து அவரது தந்தை சுப்பராயுடு கூறுகையில், “எனது மகளை மீட்பதற்காக அதிகாரிகள் கடல், கடற்கரை மற்றும் சுற்றியுள்ள புதர்கள், மரங்களை வெகுவாக தேடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்தக் குறிப்பான தகவலும் கிடைக்கவில்லை,” என்றார். மேலும், “என் மகள் மிகவும் திறமையானவர். மருத்துவ துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்” என தெரிவித்தார்
கருத்தை பதிவிட