மித்தெனியாவில் 2025 பெப்ரவரி 18 அன்று நிகழ்ந்த மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர் 2025 மார்ச் 12 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த பெப்ரவரி 18ஆம் தேதி, மித்தெனியாவில் நடந்த கொலைகள் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்செயலுக்காக தேடப்பட்ட முக்கிய சந்தேகநபர், 23 வயதுடைய அங்குலந்தெணிய – கட்டுவன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் தியத்தலாவ பகுதியில் ஒளிந்து, பின்னர் துபாய் செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது பொலிசாரால் பிடிபட்டுள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான முக்கிய குற்றவாளியை விரைவில் மித்தெனியா பொலிசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். மித்தெனியா மற்றும் தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட