கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் செல்வாக்கை இழந்ததன் விளைவாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவரது கட்சியின் ஒரு பிரிவினர் புதிய தலைமையை தேவைப்படுத்தி வந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
மார்க் கார்னி விரைவில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இன்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், நாடாளுமன்றத்திலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது நாற்காலியுடன் வெளியேறியபோது, நாக்கை நீட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறதா அல்லது சாதாரண நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கருத்தை பதிவிட