ஹோண்டுராஸ்: மத்திய அமெரிக்க நாட்டான ஹோண்டுராஸில் விமான விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் உயிர் தப்பியுள்ள நிலையில், 1 நபர் காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டுராஸின் ரோவாடான் என்ற தீவிலிருந்து லான்சா ஏர்லைன்ஸ் சார்ந்த சிறிய ரக வர்த்தக விமானம் 17 பயணிகளுடன் திங்கட்கிழமை இரவு புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி சென்றது. கடலுக்கு மேலே பறக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விமானம் விழுந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டு, உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில், பிரபல இசைக்கலைஞர் ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோ உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, விமானம் முழுமையான உயரத்தை எட்ட முடியாமல் கடலில் மூழ்கியது. காணாமல் போன நபருக்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பரிதாபமான விமான விபத்து, உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Source :- Canada mirror
கருத்தை பதிவிட