இன்று சில நேரத்துக்கு முன்பு, இலங்கை விமானப்படையின் சீன தயாரிப்புக் K-8 பயிற்சி விமானம் வாரியபொலையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த தகவலை இலங்கை விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
திருகோணமலை சீனா பே விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், விபத்துக்கு முன்பு ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, விமானி மற்றும் இணை விமானி இருவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இந்நிகழ்வின் பின்னணி குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் விவரங்கள் வெளியாகும்போது, உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.
கருத்தை பதிவிட