புதிய காவல் துறை ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படும் வரை, தன்னால் தொடர்ந்தும் அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதவி விலகல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, அவர் இதை தெரிவித்துள்ளார்.
“ஒரு காவல் துறை அதிகாரிக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால், அதிலிருந்து உடனடியாக விலகுவதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், நான் தனிப்பட்ட காரணங்களால் இடமாற்றம் கோரியுள்ளேன். அந்த செயல்முறை முடிவடைய வேண்டியதுடன், என் பதவிக்கு மாற்றாக ஒருவர் நியமிக்கப்படுவதும் அவசியம். அதுவரை, எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலக முடியாது. எனவே, எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் முடியும் வரை, நான் இப்பதவியில் பணியாற்றுவேன்.” என்று அவர் கூறினார்.
கருத்தை பதிவிட