சின்ஹாசன வீதியில் உள்ள தேவுந்தரா ஸ்ரீ விஷ்ணு ஆலயத்துக்கு தெற்கு வாயிலுக்கு முன்பாக நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு வானில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு 9 மில்லிமீட்டர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இருவரும் தேவினுவர கபுகம்புர பகுதியில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் என்றும், வீட்டிற்குத் திரும்பும் வழியில், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த வான் மோதியதும், துப்பாக்கி தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து போலீசார் 39 T-56 தோட்டாக்கள், 2 T-56 உயிர்த் தோட்டாக்கள், 2 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள், 2 9 மில்லிமீட்டர் உயிர்த் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஒரு வேன், குற்ற சம்பவ இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு புறவழியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த எரிந்த வாகனத்திற்குள், ஒரு T-56 மாகசின் மற்றும் கூடுதல் T-56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் 28 வயதான யோமேஷ் நதீஷன் மற்றும் பசிது தருக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தேவினுவர சின்ஹாசன வீதி பகுதியில் வசிப்பவர்கள்.
சம்பவ இடத்தில் மாத்தறை கூடுதல் நீதிவான் மலன் ஷிரான் ஜயசூரிய தலைமையில் இன்று (22) அதிகாலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கருத்தை பதிவிட