10,096 அரசு பாடசாலைகளுக்கு இவ்வாண்டு பாடசாலை சீருடை துணிகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மொத்தமாக 4,640,086 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12 மில்லியன் மீட்டர் நீளமான துணிகளை சீன மக்கள் குடியரசு உதவியாக வழங்கியுள்ளது.
தற்போது, அனைத்து பாடசாலைகளுக்கும் சீருடை துணிகள் விநியோகிக்கப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு பாடசாலைகளிலும், அரசாங்க அங்கீகரித்த பிரிவென்களிலும், சாதாரண மாணவர்களுக்கும் இலவசமாக பாடசாலை சீருடை துணிகளை வழங்கும் நடைமுறை 1992ஆம் ஆண்டிலிருந்து இடையீடின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2015 முதல் 2020 வரை மாணவர்கள் வௌச்சர்களைப் பெற்றுக் கொண்டு சீருடை துணிகளை பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு, மீண்டும் நேரடியாக துணிகள் வழங்கப்படுகின்றன.
2023ஆம் ஆண்டு தேவையான பள்ளி சீருடை துணிகளில் 70% பங்கினை சீனா வழங்கியது. 2024ஆம் ஆண்டில் இது 80% ஆக அதிகரித்தது.
இந்த ஆண்டு, 2025ஆம் ஆண்டுக்கான தேவைக்கு 100% சீருடை துணிகளை சீன மக்கள் குடியரசு இலவசமாக வழங்கியுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ. 5,171 மில்லியன் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட