மார்ச் 17ஆம் தேதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, அந்த இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இருவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.
சம்பவத்திற்குப் பின்னர், கிராண்ட்பாஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசியை பயன்படுத்தி சந்தேகநபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்குப் பின்னர் குற்றச்சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து இரண்டு கைப்பேசிகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குத் துணைபுரிந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிசார் சம்பவத்திற்கான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கருத்தை பதிவிட