முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது – வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியல்
கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (24) மகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த மோசடி தொடர்பாக இன்னும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்தை பதிவிட