யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய குற்றவளியை கைது செய்ய போலீசார் வருகை தந்த போதே இச் சம்பவம் நடைபெற்றது.
போலீசார் பெண்களை கலால் உதைவது என்பது முற்று முழுதாக சட்டத்திற்கு புறம்பான செயல்பாடு ஆகும்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது தாம் குற்றவளியை கைது செய்வதற்காக சென்றபோது குற்றவளி அறை ஒன்றினுள் ஒழித்திருந்ததாகவும் அந்த அறை கதவையே தாம் உதைந்து திறக்க முற்பட்டதாகவும், பெண்களை காலால் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனார்.
கருத்தை பதிவிட