இளைஞர் விவகாரத்துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு கொழுப்பிட்டிய, 5ம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் இல்லத்தை 2022 ஜூலை 9 அன்று தாக்கி அழித்த சம்பவம் மற்றும் தீயணைப்பு சேவையை தடுத்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில் சந்தேகநபராக இருக்கிறார்.
இந்த வழக்கு மார்ச் 26, 2025 அன்று கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுராவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குணசேகர உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அத்துடன் சில பிற சந்தேகநபர்களும் ஆஜராக முடியாததை சட்டத்தரணி தெரிவித்தனர் .
இதனடிப்படையில், நீதவான் நான்கு சந்தேகநபர்களுக்கு கைது வொரண்டுகளை பிறப்பித்தும், குணசேகரவை அடுத்த விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. ரங்க, ஆண்ட்ரூ ஐவன் பெரேரா, ரைகம் பதாரகே மஞ்சு, வெட்டமுனிகே ஷெரின் விக்கிரமசிங்க, தில்ருக் மதுஷங்க, அஷான் சந்தீபா, அன்வார் அலி, கொரலாகே இண்டிக்கா பிரசாத் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கருத்தை பதிவிட