நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் திடீரென காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன், நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா (வயது 48) மாரடைப்பால் நேற்று (மார்ச் 25, 2025) திடீரென காலமானார். சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார்.
மனோஜ், ‘தாஜ்மஹால்’, ‘சமுத்திரம்’, ‘அல்லி அர்ஜுனா’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பெயர் பெற்றார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் விஜய், கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட