கேகாலை மாவட்ட பொது மருத்துவமனையில் பணியாற்றும் சிறப்பு வைத்தியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸார் தெரிவித்துள்ளதன்படி, மார்ச் 28 ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் கேகாலை பொது மருத்துவமனைக்கு முன்பாக ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த சிறப்பு வைத்தியரை குறித்த நபர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டியைச் சேர்ந்த 29 வயது ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சிறப்பு வைத்தியர் தற்போது கேகாலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (மார்ச் 29) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, ஏப்ரல் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்தை பதிவிட