நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
தகவலின்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் DASH நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, கடமையை முடித்து வீட்டிற்குத் திரும்பும் வழியில், பேருந்திலிருந்து இறங்கிய வேளையில், குறித்த இளைஞர் அவரை தடியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய இளைஞர் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இதே இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து இட்டு வருகின்றனர்!
கருத்தை பதிவிட