முகப்பு உலகம் கனடாவில் தமிழ் பெண் ஒருவர் கொலை – இருவர் கைது!
உலகம்செய்திசெய்திகள்

கனடாவில் தமிழ் பெண் ஒருவர் கொலை – இருவர் கைது!

பகிரவும்
பகிரவும்

கனடாவின் மார்க்ஹாம் நகரில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்கு இலக்கான வீடு

2018 முதல் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள சோலஸ் ரோடு பகுதியில், மார்ச் 7ஆம் தேதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர்.
உடனடியாக அவசர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், 20 வயது நிலாக்ஷி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.

மற்றொரு 26 வயது ஆண் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மீண்டுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த ஒரு நாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி (Attempted Murder) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, இது தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தொடர்புடையதா? மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வட்டி வரியில் நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இன்லாண்ட் ரெவன்யூ (திருத்தச் சட்டம்) எண்...