முகப்பு இந்தியா லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!
இந்தியாஉலகம்செய்திசெய்திகள்

லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!

பகிரவும்
பகிரவும்

லீஸ்டர்ஷையர் – இங்கிலாந்து
பிராங்கிளின் பூங்கா பகுதியில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 செப்டெம்பரில் தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த 80 வயதான பீம் கோஹ்லி (Bhim Kohli) என்ற முதியவர், இரு இளம் சிறுவர் ஜோடியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து, 2025 ஏப்ரல் 8 ஆம் திகதி லீஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குறித்த 15 வயதான சிறுவனும் 13 வயதான சிறுமியுமான இருவரும் பீம் கோஹ்லியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என நீதிமன்றம் அறிவித்தது.

எப்படி நடந்தது சம்பவம்?

சம்பவத்தன்று, பீம் கோஹ்லி தமது நாயுடன் பூங்காவினூடாக நடந்து சென்றபோது, அந்த இளம் மாணவர்கள் அவரை நோக்கி இனவெறி வார்த்தைகளை உரைத்துள்ளனர். அதன் பின், சிறுமி பொய்யான தகவலை வழங்கி, “அந்த முதியவர் கையில் கத்தி வைத்துள்ளார்” என கூறியதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது. இதை நம்பிய சிறுவன் முகமூடி அணிந்து நேரில் சென்று பீம் கோஹ்லியை முகத்தில் திடீரென தாக்கினார்.

இந்த தாக்குதலின் போது, அந்த சிறுமி வீடியோ பதிவு செய்து சிரித்து கொண்டிருந்ததாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலினால் மூன்று விலா எலும்புகள் முறிந்து, கழுத்து முறிவு ஏற்பட்ட பீம் கோஹ்லி, மறுநாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட காயம் அவரது உயிரை பறித்தது.

தீர்ப்பு – சிறையில் ஆறு ஆண்டுகள்

வழக்கு விசாரணையின் முடிவில், இருவரும் குறைந்தது ஆறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை கேட்டவுடன் அந்த சிறுமி நீதிமன்றத்திலேயே கதறி அழுததாக தகவல்கள் கூறுகின்றன.

குடும்பத்தின் வேதனை

பீம் கோஹ்லியின் குடும்பத்தினர், அவர் ஒரு அன்பான கணவர், தந்தை மற்றும் தாத்தா எனக் கூறியுள்ளனர். லண்டனில் ஒரு பெரும் நிறுவனத்தை ஆரம்பித்து, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய பீம் கோஹ்லி, ஓய்வுக்குப் பிறகு அமைதியாக வாழ்ந்துவரும் நிலையில் இந்தச் சோகம் அவர்களது குடும்பத்தை வாடவைத்துள்ளது.

இந்தச் சம்பவம், இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் வன்முறையை எதிர்த்துப் பேச பலரையும் தூண்டியுள்ளது. சமூகத்தில் இனவெறிக்குப் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல எழுந்துள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப்...

ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!

ஃப்ளோரிடா மாநிலம், போக்கா ராடோனில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய விமானம் இடிபட்டதில், அதில் பயணித்த...

வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை நபரும் நாயும் உயிரிழப்பு – மலேசியாவில் சம்பவம்!

இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப்...

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...