2023ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – வெலிகம – பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று (10) மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அவருக்கு ஒருவர் ரூ.10 இலட்சம் என இரண்டு உறுதிமொழிகளுடன் பிணை வழங்கப்பட்டது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு பல வாரங்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கடந்த மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஏப்ரல் 3ஆம் திகதி வரையும் பின்னர் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கில் மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கருத்தை பதிவிட