முல்லைதீவில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று மதியம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கு உள்ளான பேருந்து, கோயில் பணிக்காக இயக்கப்பட்ட சிறப்பு போக்குவரத்து சேவையாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
விபத்தில் சில பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாலை 3.15 மணியளவில் மீட்பு பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்துவந்ததாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட