முகப்பு உலகம் ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!
உலகம்செய்திசெய்திகள்

ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

ஃப்ளோரிடா மாநிலம், போக்கா ராடோனில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய விமானம் இடிபட்டதில், அதில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக இடத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) தெரிவித்துள்ளன.

“விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம், அது மிலிட்டரி ட்ரெயில் பகுதியில் தரையிறங்கிய வேளையில் ஒரு வாகனமும் சம்பந்தப்பட்டது,” என போக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் உதவி தலைவரான மைக்கேல் லாசல்ல் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

விபத்து நேரத்தில் தரையிலிருந்த காரில் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
“தீ மற்றும் சிதறிய துண்டுகளால் அவர் மரத்தில் மோதி காயமடைந்தார்,” ABC செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.Cessna 310R எனும் விமானம் காலை 10:15 மணியளவில் போக்கா ராடோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, டல்லஹாசி பன்னாட்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டிருந்தது. சுமார் 8–10 நிமிடங்கள் பறந்த பிறகு விமானம் விழுந்ததாக, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) விமான விபத்து விசாரணையாளர் குர்ட் கிப்சன் தெரிவித்தார்.

விமானத்தின் எஞ்சல்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் வகையில் NTSB வசமாக கொண்டு செல்லப்பட உள்ளது. சாட்சிகள் மற்றும் கண்காணிப்புக் காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. ஆரம்ப அறிக்கை 30 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

விபத்து நடந்த வேளையில் அருகிலிருந்த அலுவலகத்தில் இருந்த டிலன் ஸ்மித்,
“விமானம் மிகக் குறைந்த உயரத்தில் பறந்தது. அது கட்டடத்தின் கூரையைத் தொட்டுவிடும் போலத் தெரிந்தது. பின்னர் அது திரும்பி விமான நிலையம் நோக்கி செல்கிறது போல் இருந்தது. அதன் பின் மரங்களுக்கு கீழே மறைந்தது. ஒரு பெரும் சத்தம் கேட்டது. அலுவலக ஜன்னல்கள் நடுங்கின. அடுத்த கணம் ஒரு தீப்பந்து போல எங்கும் பரவியது,” என கூறினார்.

விபத்திற்குப் பின் கிடைத்த வீடியோவில், சாலை அருகே உள்ள புகையிரத பாதையில் விமானத்தின் சிதைந்த சிதறல்கள் காணப்படுகின்றன. தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

SOURCE: ABC News

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப்...

வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை நபரும் நாயும் உயிரிழப்பு – மலேசியாவில் சம்பவம்!

இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப்...

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...

அமெரிக்க வரிவிதிப்பு: பொருளாதார சுனாமி என ஜனாதிபதி எச்சரிக்கை!

ஜனாதிபதி குமார திசாநாயக்க, இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பு பொருளாதார ரீதியில் ஒரு தேசிய பேராபத்தாகும்...