இலங்கை மின்சார சபை (CEB) இன்று முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சூரிய மின்சார (rooftop solar) அமைப்புகளை பயன்படுத்தும் மக்களிடம், ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, தினமும் முற்பகல் 3.00 மணி வரை தங்களது சூரிய அமைப்புகளை தன்னார்வமாக முடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த திருநாள் காலப்பகுதியில், நாட்டின் மின் நுகர்வு குறைவடைவதால், தேசிய மின் வலையமைப்பை (national grid) சமநிலைப் படுத்தும் நோக்கத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
🔋 “இது ஒரு அவசர கட்டுப்பாடு அல்ல – ஆனால், நாடு முழுவதும் மின்விநியோகம் சமமாக இருக்க, உங்கள் ஒத்துழைப்பு தேவை,” என CEB தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட