புதுவருட காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் (ஏப்ரல் 11, 12 மற்றும் 13) நாடளாவிய அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.134 மில்லியன் வருவாயை அரசாங்கம் பெற்றுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நாள்களில் மொத்தமாக 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர். குறிப்பாக, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 297,736 வாகனங்கள் பயணித்த நிலையில், ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் வசூலிக்கப்பட்டது.
புதுவருட கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிக அளவில் பயணம் செய்தமையே இந்த வருவாயின் முக்கிய காரணமாக நெடுஞ்சாலை பிரிவு கூறுகிறது.
கருத்தை பதிவிட