இன்று (14) காலை அக்போபுராவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்பட மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்போபுராவிலிருந்து கந்தளாயை நோக்கி புறப்பட்ட பேருந்து, அதே திசையில் சென்ற டபுள்-கேப் வாகனத்தின் பின்பகுதியில் மோதி, பின்னர் எதிர்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இது அக்போபுரா பகுதியில் அமைந்துள்ள 85வது மைல் கல்லினருகே நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதியும், பயணிகளும் ( குழந்தைகள் உட்பட) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின், பேருந்து சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாவனெல்லவை சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்போபுரா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட