2025 மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 17.2 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய தகுதி பெற்றுள்ளனர்.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அரசாங்க அச்சகத்தினால் சுமார் ஒரு கோடி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுவதுடன் அது இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 400-க்கும் மேற்பட்ட நியமனப் பட்டியல்கள் நிராகரிக்கப்பட்டதுடன், சில நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் அவற்றில் 37 ஏற்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மே 16ஆம் திகதி வரை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.
அஞ்சல் வாக்களிப்பு ஏப்ரல் 22–24 மற்றும் 28–29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதுடன், தேர்தல் செலவுகள் ஒருவருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரையிலான வரம்புகளுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கருத்தை பதிவிட