அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுத் தலைவர்கள் அனைவருக்குமான அறிவித்தல் ஒன்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
2025 மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட நியமனக் கடிதங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் பிரதிகளை, தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வகையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், உரிய ஆவணங்களை விரைவில் கையளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் செயல்முறை சரியான முறையிலும், சட்டரீதியிலும் நடைபெறுவதற்காக இவ்வாயிலாக தேவையான சட்ட தெளிவை பெறுவது மிகவும் முக்கியமெனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட