இலங்கையின் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இதுவரை முற்றிலும் முறியடிக்கப்படாததற்கான முக்கியக் காரணம், அந்தத் துறையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அரசியல்வாதிகள் தாங்கள் நேரடியாக பாதுகாப்பளித்ததுதான் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா குற்றம்சாட்டினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கொலன்னாவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தெளிவாகக் கூறினார்.
“கொலன்னாவை இன்று போதைப்பொருள் வியாபாரத்துடன் இணைத்து பேசுகிறார்கள். இது இவ்வளவு வேரூன்றச் செய்யப்பட்டது எப்படி? இதுக்கெல்லாம் காரணம் – அரசியல்வாதிகளே. போதை வியாபாரத்தில் இருந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்புப் பலகையாகவே அவர்கள் செயல்பட்டார்கள்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கள்ளப்போதைப்பொருள் வியாபாரத்திற்கு வழங்கப்பட்ட அரசியல் பாதுகாப்பைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்நாட்டில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால், எதிலும் அவசரப்படவேமாட்டோம். திட்டமிட்டவிதமாக, கட்டுப்பாட்டுடன் நடவடிக்கை எடுப்போம்,” எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரியா வலியுறுத்தினார்.
கருத்தை பதிவிட