போப் பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக விளங்கிய இவர், 2025 ஏப்ரல் 21ஆம் திகதி காலை 7:35 மணிக்கு (CEST), 88வது வயதில் வாடிகன் நகரிலுள்ள தமது வாசஸ்தலமான டொமுஸ் சாங்க்தே மார்தாவில் இறைவனடி சேர்ந்தார். அவருடைய மரணம் அதே காலை வாடிகனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. இந்த செய்தியை கார்டினல் கேவின் ஃபாரெல்ல், வாடிகன் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.
போப்புத் தூயவர் நீண்ட நாட்கள் சுவாச சம்பந்தப்பட்ட நோயாலும், இரட்டைப் நிமோனியா நோயாலும், அவதிப்பட்டிருந்தார். இதனாலே இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 38 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவுடன் இருந்த போதிலும், இறுதி முறையாக ஈஸ்டர் ஞாயிறன்று, வாடிகனில் உள்ள மக்கள் மீது ஆசீர்வாதம் வழங்கினார்.
உலகத் தலைவர்கள் போப் பிரான்சிஸின் இரக்கம், தாழ்மை மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை போற்றி சிறப்பான அஞ்சலியைத் தெரிவித்தனர். அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வேன்ஸ், இந்திய முதல்அமைச்சர் நரேந்திர மோடி, ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் ரொபெர்டா மெட்சோலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவருடைய அமைதிக்கான பணிகள், ஒருமைப்பாட்டுக்கான நோக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயற்பாடுகள் ஆகியவற்றை நினைவுகூர்ந்தனர்.
வாடிகனில் பாரம்பரிய இரங்கல் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில், சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொது ரோசரிப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. அவரது பூதவாரியங்கள் மற்றும் வாரிசுத் தெரிவுக்கான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
கருத்தை பதிவிட