முகப்பு இலங்கை தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

பகிரவும்
பகிரவும்

கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 8 கிலோ 960 கிராம் தங்கம் கொண்ட பொதியுடன் சந்தேக நபர்கள் இருவர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் மற்றும் ஒரு படகு ஆகியன தலைமன்னார் ஊருமலை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரல் 21ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையின் தம்மன்னா முகாமுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தலைமன்னார் ஊருமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 8 கிலோ 960 கிராம் தங்கம் மற்றும் அந்தத் தங்கத்தை கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்ட படகு ஆகியன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத்துறை விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

அஞ்சல் வாக்களிப்பு இன்று (ஏப்ரல் 24, 2025) -24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன!

இலங்கை 2025 உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று (ஏப்ரல் 24, 2025) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது....

போலீசாரின் தொடையில் பலமுறை கடித்த நபருக்கு 5400 பிராங்குகள் அபராதம்!

ஸ்விட்சர்லாந்தின் வொல்லெராவ் (Wollerau) என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக 42 வயதுடைய ஒருவர்...

அமெரிக்கா, இலங்கை உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் – வரி சிக்கல்களை தீர்க்க முயற்சி?

இலங்கை ரூ.3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்கா 44% வரி விதித்துள்ளது. இது பெரும்பாலும் ஆடைத்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார் டேன் பிரியசாத்!

2025 ஏப்ரல் 23ஆம் தேதி நிலவரப்படி, சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் ஒரு துப்பாக்கிச் சூட்டு...