மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரே ஒரு புள்ளடி மட்டும் இடுக!
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரே ஒரு வாக்குப் பத்திரம் வழங்கப்படும், மேலும் அந்த வாக்குப் பத்திரத்தில் ஒரே ஒரு குறி (புள்ளடி)மட்டுமே இட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப் பத்திரத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள், சுயாதீன குழுக்கள் போட்டியிடும் போது “சுயாதீன குழு” என்ற சொல்லும், அடையாள இலக்கம் மற்றும் சின்னமும் மட்டுமே அச்சிடப்படும். வேட்பாளர்களின் பெயர்கள் அல்லது பிரதேச எண்கள் அதில் அச்சிடப்படமாட்டாது.
வாக்களிக்கும் போது, நீங்கள் ஆதரிக்கும் கட்சி அல்லது சுயாதீன குழுவின் சின்னத்திற்கு வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் ஒரு குறியை (புள்ளடி) மட்டும் இட வேண்டும்.
வாக்குப் பத்திரத்தில் வேறு எந்த வகையான குறியீடுகளும், வரைவதும், எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட