இன்று, 23 ஏப்ரல் 2025, புதன்கிழமை, உங்கள் ராசிக்கான பலன்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன
🐏 மேஷம் (Mesha)
இன்று வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.
🐂 ரிஷபம் (Rishabha)
பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.
👯 மிதுனம் (Mithuna)
உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.
🦀 கடகம் (Kataka)
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
🦁 சிம்மம் (Simha)
சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
👧 கன்னி (Kanya)
மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும்.
⚖️ துலாம் (Tula)
எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
🦂 விருச்சிகம் (Vrischika)
இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். அன்றாட வேலையில் கவன குறைவு வேண்டாம். அடுத்தவர்களை குறை கூற வேண்டாம். வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும். உங்கள் கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் போதும்.
🏹 தனுசு (Dhanusu)
இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டு வேலை, அலுவலக வேலை, பிள்ளைகளை பார்ப்பது என்று எல்லா சுமையும் உங்கள் தலைமையில் விழுவது போல சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள். இன்று மாலை கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் ஜாக்கிரதை.
🐊 மகரம் (Makara)
இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்திற்காக பெண்கள் எடுக்கும் முடிவுகள் இன்று குடும்பத்திற்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.
⚱️ கும்பம் (Kumbha)
இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.
🐟 மீனம் (Meena)
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக யாத்திரை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். இரவில் நீண்ட நேரம் கண்விழிக்காமல் இருப்பது நல்லது. நட்பு வட்டம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
கருத்தை பதிவிட