அரசாங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன்களை வழங்கும் நடைமுறைகளில் புதிய திருத்தங்களை கொண்டுவரும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சுற்றறிக்கை 2025 மே 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க ஊழியர்கள் பெறக்கூடிய அதிகபட்ச அனர்த்தக் கடன் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 4,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், 2025 அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...
மூலம்AdminOctober 16, 2025இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...
மூலம்AdminOctober 16, 2025கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...
மூலம்AdminOctober 16, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட