ஜெனீவா – மே 10, 2025
சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கான மசோதா மீது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.இதில், 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக எந்தவிதமான உடல் அல்லது உளவியல் வன்முறையையும் பயன்படுத்தக்கூடாது என்பதையே இந்த மசோதா வலியுறுத்துகிறது.
பெரும்பான்மையின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இச்சட்ட மசோதா செனேட் பாராளுமன்றத்துக்கு (மேல் மன்றம்) மேலதிக ஆராய்வுக்காக அனுப்பப்படவுள்ளது.
இது தொடர்பில், சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s Party) மட்டுமே, இது தேவையற்ற முயற்சி எனக் கூறி மசோதாவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட